Skip to main content

நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன அதன் நோக்கம்

நான் முதல்வன்

 

Tamil Nadu Chief Minister M.K. Stalin on march,1, 2022 Tuesday inaugurated the ‘ Naan Mudhalvan’ scheme, which aims to equip about 10 lakh youth across the State 

 

 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள்‌ மற்றும்‌ இளைஞர்கள்‌, படிப்பில்‌ மட்டுமல்லாது, வாழ்க்கையிலும்‌ வெற்றி பெறும் வகையில்‌ நான்‌ முதல்வன்‌ என்ற திறன்‌ மேம்பாட்டு மற்றும்‌ வழிகாட்டுதல்‌ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை

 கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்

நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் 

Objectives of the project

நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ முக்கிய நோக்கம்‌, ஆண்டுக்குப்‌ பத்து இலட்சம்‌ இளைஞர்களைப்‌ படிப்பில்‌, அறிவில்‌, சிந்தனையில்‌, ஆற்றலில்‌, திறமையில்‌ மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல்‌ ஆகும்‌.

 

 

Project Highlights

தனித்‌ திறமைகளை அடையாளம்‌ கண்டு அதனை மேலும்‌ ஊக்குவிப்பது ஆகும்‌. 

 

அடுத்தடுத்து அவர்கள்‌ என்ன படிக்கலாம்‌, எங்கு படிக்கலாம்‌, எப்படிப்‌ படிக்கலாம்‌ என்றும்‌ வழிகாட்டப்படும்‌.

 

தமிழில்‌ தனித்‌ திறன்‌ பெற சிறப்புப்‌ பயிற்சியுடன்‌,

 

ஆங்கிலத்தில்‌ எழுதவும்‌, சரளமாகப்‌ பேசுவதற்கும்‌, 

 

நேர்முக தேர்வுக்கு தயாராவது 

 

குறித்தும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்படும்‌. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படும்‌.

 

ஒவ்வொரு துறையிலும்‌ தலைசிறந்த சாதனையாளர்களைக்‌ கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள்‌ நடத்தப்படும்‌. இவற்றைத்‌ தவிர, மனநல மருத்துவர்கள்‌, உடல்நல மருத்துவர்களைக்‌ கொண்டு திடமான உணவு வகைகள்‌ உட்கொள்வது குறித்து ஆலோசனைகள்‌ வழங்குவதுடன்‌, உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம்‌, மக்களோடு பழகுதல்‌, ஆகியவை குறித்தும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்படும்‌. 

 

அயல்நாட்டு மொழிகள்‌ (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில்‌ வழிவகை செய்யப்படும்‌.

Implement

 

 நேரடிப்‌ பயிற்சி, இணைய வழிப்‌ பயிற்சி, அவரவர்‌ கல்லூரியில்‌ பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி என தேவைக்கேற்ப பயிற்சிகள்‌ அளிக்கப்படும்‌. 

 

 

நாட்டின்‌ தலைசிறந்த நிறுவனங்கள்‌ / புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்‌ / திறன்‌ மேம்பாட்டு நிறுவனங்களில்‌ சேர்க்கையையும்‌ இந்தத் தொடர்‌ பயிற்சிகள்‌ மூலம்‌ உறுதி செய்யப்படும்‌. 

 

தமிழ்நாடு அரசுத்துறை மற்றும்‌ நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்புகள்‌, ஒன்றிய அரசின்‌ வேலைவாய்ப்புகள்‌, பிற மாநிலங்களின்‌ வேலைவாய்ப்புகள்‌ ஆகிய அனைத்தும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு,

 

 பயிற்சிகள்‌ ஒருங்கிணைக்கப்படும்‌. பயிற்சி பெற்ற பயனாளிகள்‌ வேலைவாய்ப்பு பெறுவதையும்‌, அதைத்‌ தொடர்வதையும்‌, தொடர்ந்து கண்காணிக்கப்படும்‌. இதைத் தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும்‌ தேவைகளின்‌ அடிப்படையில்‌ நடத்தப்படும்‌. இத்திட்டத்தின்‌ அனைத்து விவரங்களும்‌ அடங்கிய வலைதள பலகை (Portal) உருவாக்கப்படும்‌. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ நேரடி கண்காணிப்பில்‌, சிறப்புத்‌ திட்ட செயலாக்கத்‌ துறை இப்புதிய திட்டமான நான்‌ முதல்வன்‌ திட்டத்தை ஒருங்கிணைக்கும்‌. மேலும்‌, மாவட்டங்களில்‌ மாவட்ட ஆட்சியர்‌ தலைமையிலான குழு இத்திட்டத்தை செயல்படுத்தும்‌.


Comments

Popular posts from this blog

TNPSC Junior Rehabilitation Officer

*Junior Rehabilitation Officer (Tamilnadu General Subordinate Service)-Tamil Nadu Public Service Commission (TNPSC)-Notification* *Source:* https://www.tnpsc.gov.in/English/Notification.aspx *Online Registration:* From 09/12/2022 To 07/01/2023 *Date of Examination:* 01/04/2023 FN & AN *For more details:* https://www.tnpsc.gov.in/Document/english/35_2022_JRO_ENG.pdf  *Apply Online:* http://tnpscexams.in/  ☝🏼☝🏼☝🏼☝🏼☝🏼

Private Job

Dear Connections! o We are looking for people with FuSa System / SW / HW knowledge @RLE Bangalore | Pune | Chennai o Functional safety manager (FSM) with FuSa experience related to System and SW and HW would be great o Worked on Safety work products like Item definition, HARA, Functional safety concept, technical safety concept, functional safety requirements, technical safety requirements etc. o Looking for people with 3-5 yrs exp., or 5-8 yrs exp and also greater than 8 - 10 yrs exp. Are you looking for change in exciting global projects , Please do reach out to me  Cheers Guna | Gunabharathi@rle.co.in 9611452194 RLE INDIA https://www.rle.international/